முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் புதிய நிர்வாகக் குழுவை நியமித்து விஜய் உத்தரவு!

புதுவையில் தவெக புதிய நிர்வாகக் குழு நியமனம் தொடர்பாக...

Updated On : 16 பிப்ரவரி 2026, 5:45 pm IST
விஜய் - கோப்புப் படம்
பகிர்:

புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழுவை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுளையும் ஒருங்கிணைக்க, அம்மாநிலத்திற்கென புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

எனது உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, பொதுச் செயலாளருடன் இணைந்து, இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்கு தவெக நிர்வாகிகள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நேரத்தில் உங்களுடன் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தை ஒதுக்கியிருப்பதை அனைவரும் அறிவீர்கள்.

தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் அதே விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

New executive committee appointed for TVK in Puducherry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.