FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நல்வரவு - நல்லுறவு: தேமுதிகவை வரவேற்கும் மு.க. ஸ்டாலின்

நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Updated On : 19 பிப்ரவரி 2026, 11:14 am IST
திமுகவில் இணைந்தது தேமுதிக
பகிர்:

நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை வரவேற்பு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேர திருப்பமாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 2026 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரை சந்தித்தனர் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா மற்றும் பொருளாளர் சுதீஷ் ஆகியோர். சந்திப்புக்குப் பின் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தேமுதிகவை வரவேற்று பதிவிட்டுள்ளார்.

அதில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments