முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 2 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 2 ஜூலை 2026, 10:16 pm IST
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்
பகிர்:
Updated On : 2 ஜூலை 2026, 10:16 pm IST

பிகாரின் பங்கிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர்?

பிகாரில் நடைபெறவுள்ள பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 10:13 pm IST

மு.க. ஸ்டாலினை சந்தித்த அமெரிக்க துணைத் தூதர்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அமெரிக்க துணை தூதர் மரியானா எல். நெய்ஹூலர் இன்று (ஜூலை 2) சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது திராவிட மாடல் புத்தகத்தை அவருக்கு மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

Updated On : 2 ஜூலை 2026, 10:12 pm IST

அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா கசிந்த ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 2 ஜூலை 2026, 10:12 pm IST

மேக்கேதாட்டு அணை! தமிழ் மண்ணின் உரிமையில் சமரசம் இல்லை: அமைச்சர் ராஜேஷ் குமார்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் உறுதியளித்துள்ளார்.

Updated On : 2 ஜூலை 2026, 9:30 pm IST

ஆளுநரை ஆய்வுக்கு அனுப்புகிறது தவெக அரசு: உதயநிதி கண்டனம்

மதுரை வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பேசியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜூலை 2026, 7:32 pm IST

மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தலைமையில் மறுசீரமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தங்கம் தென்னரசு, எஸ்.எஸ். சிவசங்கர் உள்ளிட்ட திமுக மறுசீரமைப்புக் குழு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Updated On : 2 ஜூலை 2026, 7:32 pm IST

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! ஒரே நாளில் ரூ. 2400 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு இன்று (ஜூலை 2) காலை ரூ. 1200 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 1,200 உயர்ந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் 22 காரட் சவரன் ரூ.1,08,400-க்கு விற்பனையாகிறது.

Updated On : 2 ஜூலை 2026, 3:00 pm IST

முதல் மாநாடு!

’வீ த லீடர்ஸ்’ (இது நம்ம இயக்கம்) அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Updated On : 2 ஜூலை 2026, 2:34 pm IST

இடைத்தேர்தல் அறிவிப்பு!

பிகார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 12:32 pm IST

காங்கிரஸுடன் இணையும் சரத் பவார் கட்சி

காங்கிரஸ் கட்சியுடன் சரத் பவாரின் கட்சியை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 11:51 am IST

தவெகவில் இணைந்தனர்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தவெகவில் இணைந்துள்ளனர்.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்

வடக்கில் பாஜக பயன்படுத்தும் வாஷிங்மிஷன் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்று தவெகவை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

மு.க. ஸ்டாலின் விலகினால்தான்...

மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும் என்று அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை அதிரடியாக பவுனுக்கு 1,200 உயா்ந்துள்ளது. அதன்படி பவுன் ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

செந்தில் பாலாஜியை தேடும் தனிப்படை?

திமுகவுக்கு மாறும்படி தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

‘யூஸர்நேம்’ பயன்பாட்டுக்கு தடை

வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாக இருக்கும் யூஸர்நேம் பயன்பாட்டுக்கு தற்காலிகத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

அதிமுகவிலிருந்து ராஜசேகரன் விலகல்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

தாஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

தாஜிகிஸ்தானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

6 பேர் கைது

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில் மேலும் 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

சீமான் குற்றச்சாட்டு

ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவாா்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 2 ஜூலை 2026, 11:03 am IST

இந்தியா - இங்கிலாந்து போட்டி ரத்து

இங்கிலாந்து - இந்தியா அணிகள் நேற்றிரவு மோதிய முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments