FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருப்பது லஞ்சம்தான் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Updated On : 10 ஜூலை 2026, 6:36 pm IST
விஜய் | நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் தற்போது 31 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, "கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் அரசுப் பணி ஆணை வழங்கியுள்ளார். நானும் அதற்கு வரவேற்பளித்தேன்.

Advertisement

Advertisement

இதனைப்போல சாலை விபத்தில் உயிரிழந்தோர், மின்சாரத் துறையில் வாரிசு அடிப்படையில் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது, போக்குவரத்துத் துறையிலும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது, வருவாய் மற்றும் கூட்டுறவுத் துறையில் பணியாற்றியபோது உயிரிழந்தோரின் வாரிசுகள் என ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

குரூப் 1, டெட் போன்ற தேர்வுகளுக்காகப் படித்து, கடினமாக உழைத்தவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கும் முன்னரே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக அரசுப் பணி கொடுக்கப்பட்டதில் தவறில்லை.

இவர்களின் (தவெக) கூட்டத்தில் இறந்தவர்களுக்கு கொடுப்பதைப் பார்த்தால், இதில் சுயநலம் இருப்பது தெரிகிறது" என்று தெரிவித்தார்.

summary

The issuance of appointment orders to the families of those who lost their lives in the Karur stampede amounts to bribery,says BJP Chief Nainar Nagenthran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments