விஜய்யின் வெற்றி நிற்காது, நிலைக்காது; அது ஒரு கானல் நீர்! அதிமுக
தவெக ஆட்சி நிச்சயமாக நிலைக்காது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பற்றி...
தவெக ஆட்சி நிச்சயமாக நிலைக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, அதிமுக - திமுக வேண்டாம் என்று நினைக்கும் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள், ஒவ்வொரு முறையும் ஒரு மாற்றுக் கட்சிக்குத்தான் வாக்களிப்பர். விஜயகாந்த் வரும்போது அவருக்கு வாக்களித்தனர், வைகோவுக்கு வாக்களித்தனர், சீமானுக்கும் வாக்களித்தனர். இப்படி மாற்றுக் கருத்து உள்ளவர்கள் அதிமுக - திமுக இரு கட்சிகளுக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.
இப்படித்தான் விஜய்க்கு வாக்களித்துள்ளனர். அத்துடன் அவர் நடிகராக இருந்தாலும், மக்களிடையே எளிதாகச் சென்றுவிட்டார். குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,500, வீடற்றோருக்கு வீடுகள், கல்லூரிப் படிப்புகள் வரையில் அனைவருக்கும் இலவசம் என நடக்காதவற்றையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளாக அவர் கொடுத்த காரணத்தாலேயே அவருக்கு வாக்களித்து, வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இந்த வெற்றி நிச்சயமாக நிரந்தரமானது அல்ல. இது கானல் நீர்.
Advertisement
Advertisement
இதை நம்பி அங்கு சென்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்தில் இணைவதற்கு அனுமதி கேட்கும் காலம் விரைவில் வரும். இந்த ஆட்சி நிச்சயமாக நிற்காது; நிலைக்காது.
இன்று அமைந்திருக்கும் ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சிதான். பல்வேறு கூட்டுக் கட்சிகளின் கலவை. இது திமுகவுடன் வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து அமைந்திருக்கிற ஓர் ஆட்சி.
தவெகவுக்கு வாக்களித்தவர்களுக்கு யார் வேட்பாளர் என்றே தெரியாது. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாமல் வாக்களித்துள்ளனர். ஆகையால், இந்த வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகள் போன்றவைதான் என்று தெரிவித்தார்.
TVK's rule will certainly not last, says ADMK Leader Rajendra Balaji
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.