சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 13) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...
எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் இன்று (திங்கள்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
சகோதரரை தாக்கிய வழக்கில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகிறார்.
தவெக பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
பள்ளிகளை அரசியல் தளமாக்குவதைத் தடுக்க நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் அமலாக்கத் துறை பதிந்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையும் இன்று நடைபெறுகிறது.
"About the cases coming up for hearing in the Madras High Court today (July 13)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.