FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Updated On : 31 அக்டோபர் 2024, 7:00 am IST
முதியோர் இல்லத்தில் களைகட்டிய தீபாவளி பண்டிகை
பகிர்:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபங்களின் திருநாள் என்றழைக்கப்படும் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் பண்டிகையை கொண்டாடுவர். மேலும், உறவினர்களின் இல்லங்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்றும் பண்டிகையை கொண்டாடுவர்.

அந்தவகையில் இன்று அதிகாலை முதலே புத்தாடை அணிந்து மக்கள் பட்டாசு வெடித்தும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

கோயில்களில் சிறப்பு தரிசனம்

தீபாவளியையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருச்செந்தூர், பழனி, ஆகிய கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்துவந்தனர்.

சென்னையில் வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இறைச்சி கடைகளில் கூட்டம்

தீபாவளியையொட்டி அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பட்டாசு, இனிப்புகளுக்கு அடுத்தபடியாக இறைச்சி எடுத்து சமைத்து உண்பது முக்கியத்துவம் பெறுவதால், இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே கூட்டம் அதிகரித்திருந்தது.

பேருந்து, ரயில் நிலையங்கள், சந்தை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments