பாமகவுக்கு குட் பை, அன்புமணியை தலைவராக ஏற்க மாட்டோம்: முன்னாள் எம்எல்ஏ அருள்
செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்ததாவது...
பாமகவுக்கு விடை கொடுப்பதாகவும், அன்புமணியை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் செயல்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. அருள் தலைமையில், ஒன்றுபடுவோம் ஒன்றிணைவோம் என்ற பெயரிலான ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூலை 16) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், கடந்த 38 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடுமையாக உழைத்ததாகவும், அன்புமணியை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியதே தான் என்றும், இதற்காக ராமதாஸிடம் தீட்டு வாங்கிய நிகழ்வு நடந்ததாகத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற பின் அவரது ஒவ்வொரு கூட்டங்களையும் தானே முன் நின்று நடத்தி வந்ததாகவும், குடும்பத்தில் தந்தை - மகன் உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ், தன்னிடம் வருத்தத்தை பதிவு செய்ததாகவும் ஒருபோதும் உங்களை விட்டுச்செல்ல மாட்டேன் என்ற அடிப்படையில் அவரிடம் இணைந்து பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.
ஆனால், தற்போது அதற்கான கதவு மூடப்பட்டு விட்டது, ஆனால் என்றைக்குமே டாக்டர் ராமதாஸ்தான், என்னுடைய கடவுள் என்றும், பலமுறை எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்றும் என்னை அரசியலில் ஆளாகிவிட்டவரும் அவர்தான் என்றும் ஒருபோதும் அவரை மறக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்
அன்புமணியை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், பாமகவுக்கு விடை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஒருபோதும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை பயன்படுத்த மாட்டோம் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
Former PMK MLA Arul has stated that they are parting ways with the PMK and will never accept Anbumani as their leader.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.