அரசுமுறை பயணத்தில் விதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!
அரசுமுறை பயணத்தில் அமைச்சர்கள் விதிமீறலில் ஈடுபட்டதாக ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசின் நோட்டீஸ் குறித்து...
மத்திய அரசின் அனுமதியின்றி அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றதாக அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரான ராஜ்மோகனும், தமிழ்நாடு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சரான கீர்த்தனாவும் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்று வந்தனர். இவர்களுடன் துறைசார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் சென்று வந்தனர்.
இந்த நிலையில், அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களோ உயர் அதிகாரிகளோ, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடமிருந்து உரிய அனுமதியைப் பெறுவது கட்டாயம். மேலும், இத்தகைய பயணங்களின்போது அவர்கள் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் மூலமாகவே பயணிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
ஆனால், அமைச்சர்கள் ராஜ்மோகனும் கீர்த்தனாவும் மத்திய அரசிடம் எந்த அனுமதியும் பெறாமலும், தங்களுடைய தனிப்பட்ட சொந்த பாஸ்போர்ட் மூலமாக அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அமைச்சர்கள் விதிமீறலில் ஈடுபட்டதாக இருவரையும் விளக்கம்கோரி இருவருக்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், மத்திய அரசின் அனுமதியின்றி அமைச்சர்கள் எப்படி வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகளும் ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களின் கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.
Central Government issues notice to Ministers Rajmohan and Keerthana
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.