யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு
யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது...
வனத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆா்வலா் எஸ்.முரளிதரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் வனத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும், கோயில் யானைகளுக்கும் சிகிச்சை அளிக்க தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு தலைமை வனப் பாதுகாவலா் அனுமதி வழங்கியுள்ளாா்.
வனத் துறையில் தகுதியான கால்நடை மருத்துவா்கள் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள நிலையில், வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் குறித்து வனப் பாதுகாவலா் விளக்கம் அளிக்கவில்லை.
Advertisement
Advertisement
எனவே, யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோயிருந்தாா்.
இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வனத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
Private NGOs should not be involved in treating elephants: High Court orders.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.