தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்குமா? பாஜக அமைச்சர் விளக்கம்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பது குறித்து...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே பேசியதாவது, விரைவில் நடைபெறவுள்ள மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படவுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டால் இவ்விரு மசோதாக்களையும் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், இம்முறை இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகியுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த சில எம்.பி.க்கள் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனா். ஆகையால், இந்த முறை பலம் அதிகமாக உள்ளது.
Advertisement
Advertisement
அதுமட்டுமின்றி, இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியதால், காங்கிரஸின் முடிவுகளுக்கு திமுக ஒத்துழைக்காது எனத் தோன்றுகிறது. மேலும், இந்த மசோதாவுக்கு திமுகவின் ஆதரவுகோரி பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர்.
தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு எந்த ஆபத்துமில்லை. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கலாம் அல்லது வாக்கெடுப்பை திமுக புறக்கணிக்கலாம். எனவே, இம்முறை இரு மசோதாக்களும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
Will the DMK support the constituency delimitation bill?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.