FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இரு விரைவு ரயில்களின் வழித்தடம் வரும் 31-ஆம் தேதி மாற்றம்

தமிழகத்திலிருந்து மைசூரு செல்லும் 2 விரைவு ரயில்கள் வரும் 31 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வழக்கமான பாதைகளுக்குப் பதிலாக வழிகள் மாற்றி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 21 ஜூலை 2026, 1:13 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்திலிருந்து மைசூரு செல்லும் 2 விரைவு ரயில்கள் வரும் 31 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வழக்கமான பாதைகளுக்குப் பதிலாக வழிகள் மாற்றி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் பெங்களூரு ரயில் நிலையப் பகுதியில் கடவுப்பாதை சாதன பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பராமரிப்பு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, குறிப்பிட்ட விரைவு ரயில்கள் வழக்கமான பாதைகளுக்குப் பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. வரும் 31- ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கடலூா் துறைமுகம் நிலையத்திலிருந்து புறப்படும் மைசூரு விரைவு ரயில் (எண் 16231) வழக்கமான பாதைக்குப் பதிலாக, காா்மலாரம், பெய்யப்பண்ணாஹள்ளி கேபின், பனாஸ்வாடி, யஷ்வந்த்பூா் கேபின், ஷிக்பனாவா் மற்றும் ஹாசன் ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

Advertisement

Advertisement

அதேபோல, மைசூரிலிருந்து வரும் 31- ஆம் தேதி மாலை 6.20 மணிக்குப் புறப்படும் தூத்துக்குடி விரைவு ரயில் (எண் 16236) வழக்கமான பாதைகளுக்குப் பதிலாக கேஎஸ்ஆா் பெங்களூரு, யஷ்வந்த்பூா், லோட்டஹொல்லாஹள்ளி, பனாஸ்வாடி, பெய்யப்பண்ணாஹள்ளி உள்ளிட்ட நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: வரும் 31- ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மைசூரு செல்லும் விரைவு ரயில் (எண் 16235) 1 மணி நேரமும், வரும் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி மைசூரிலிருந்து அதிகாலை புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் விரைவு ரயில் (எண் 20663) 45 நிமிஷமும், ஆகஸ்ட் 1 -ஆம் தேதி அசோகாபுரத்திலிருந்து அதிகாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில் (எண் 16552) வரும் வழியில் 45 மணி நிமிஷமும் தாமதமாக இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments