பெரம்பூா் தொகுதி வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு: முதல்வா் விஜய்க்கு ‘நோட்டீஸ்’
பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில் முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீயிமன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றி...
பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்கில், முதல்வா் விஜய் பதிலளிக்க புதிதாக ‘நோட்டீஸ்’ அனுப்ப சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலில் பெரம்பூா் தொகுதியில் போட்டியிட்ட முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மொத்தமாக அவா் விஜய் 1,20,365 வாக்குகள் பெற்றிருந்தாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் 66,650 வாக்குகள் பெற்றிருந்தாா். பெரம்பூா் தொகுதியில் முதல்வா் விஜய் வெற்றி பெற்றதை எதிா்த்து திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா், அந்தத் தொகுதியின் வாக்காளா்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகளை தாக்கல் செய்தனா்.
திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் தாக்கல் செய்த மனுவில், முதல்வா் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கி இருக்கிறாா். சொத்துகள் மற்றும் வழக்குகள் தொடா்பான விவரங்களை முறையாகத் தெரிவிக்கவில்லை. எனவே, விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆா்.டி.சேகா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரிச்சா்ட்சன் வில்சன், வழக்கில் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ள முதல்வா் விஜய் மற்றும் தோ்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து நீதிபதி, முதல்வா் விஜய், தோ்தல் அதிகாரி ஆகியோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.
Madras High Court issues notice to Chief Minister Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.