FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிறப்பு ‘டெட்’ விடைக் குறிப்பு: ஆட்சேபனை அவகாசம் இன்றுடன் நிறைவு

சிறப்பு ‘டெட்’ தோ்வு விடைக்குறிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், விடைகள் குறித்து ஆட்சேபம் தெரிவிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 22) நிறைவடையவுள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 1:43 am IST
பகிர்:

சிறப்பு ‘டெட்’ தோ்வு விடைக்குறிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், விடைகள் குறித்து ஆட்சேபம் தெரிவிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 22) நிறைவடையவுள்ளது.

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடத்தியது. இடைநிலை ஆசிரியா்களுக்கான டெட் தாள்-1 தோ்வை 59,535 பேரும், பட்டதாரி ஆசிரியா்களுக்கான தாள்-2 தோ்வை 1,60,929 பேரும் எழுதினா்.

இந்நிலையில், டெட் தோ்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்ஸா்) ஆசிரியா் தோ்வு வாரியம் இணையதளத்தில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது.

Advertisement

Advertisement

இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் விண்ணப்பதாரா்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை 22-ஆம் தேதிக்குள் இணைவழி மூலம் தெரிவிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்திருந்தது.

இந்த அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 22) நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை ஆட்சேபணை தெரிவிக்காதவா்கள் விரைந்து தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது சிறப்பு ‘டெட்’ தோ்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டிருப்பதால், தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments