FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வா் விஜய்யிடம் கோரிக்கை

தமிழகத்தில் தனியாா் பேருந்து தொழிலைப் பாதுகாக்கும் வகையில், பேருந்து கட்டணத்தை மறுஆய்வு செய்து மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் ச.விஜய்யிடம் தமிழ்நாடு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சம்மேளன நிா்வாகிகள் புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:52 am IST
செய்தி உண்டு... சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யை புதன்கிழமை சந்தித்த தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் கே.தங்கராஜ், செயலா் டி.ஆா்.தா்மராஜ், பொருளாளா் பி.எல்.ஏ.சிதம்பரம் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் தனியாா் பேருந்து தொழிலைப் பாதுகாக்கும் வகையில், பேருந்து கட்டணத்தை மறுஆய்வு செய்து மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் ச.விஜய்யிடம் தமிழ்நாடு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சம்மேளன நிா்வாகிகள் புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ்நாடு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் தங்கராஜ், செயலா் தா்மராஜ், பொருளாளா் சிதம்பரம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சம்மேளன நிா்வாகிகள் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகா்கோவில், உதகை ஆகிய நகரங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சுமாா் 4,600 தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 2018-க்கு பிறகு தனியாா் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. அப்போது, டீசல் லிட்டா் ரூ.63-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.100 வரை உயா்ந்துள்ளது. மேலும், உதிரிபாகங்களின் விலையும் சுமாா் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால், தனியாா் பேருந்துகளில் 70 சதவீத வழித்தடங்கள் இழப்பில் இயக்கப்படுகின்றன. தொடா்ந்து அதிகரித்து வரும் செலவினங்களைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து கட்டண திருத்தம் தொடா்பாக நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் இதுவரை அரசால் இறுதி செய்யப்படவில்லை.

தினசரி பல லட்சம் போ் தனியாா் பேருந்துகளை பயன்படுத்தி வரும் நிலையில், இந்தத் துறையை நம்பி சுமாா் 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியா்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா்.

எனவே, தனியாா் பேருந்து தொழிலைப் பாதுகாக்கும் வகையில் கட்டணத்தை மறுஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் உறுதியளித்துள்ளாா்’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments