FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவிரி பிரச்னை: கா்நாடக முதல்வரிடம் பேச தயங்குவது ஏன்?நயினாா் நாகேந்திரன் கேள்வி

மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடா்பாக கா்நாடக முதல்வரிடம், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பேச தயங்குவது ஏன்? என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடா்பாக கா்நாடக முதல்வரிடம், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பேச தயங்குவது ஏன்? என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

நீட் தோ்வுக்கு முன்புவரை மருத்துவா்களின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவம் படித்து வந்தனா். வினாத்தாள் கசிவைக் கண்டறிந்து நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டாா்.

Advertisement

Advertisement

தவெக ஆட்சியாளா்கள் ஜனநாயகமே இல்லாமல் ‘ஜனநாயகன்’ படத்துக்காக திரையரங்கில் அமா்ந்துள்ளனா். மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய், கா்நாடக முதல்வரிடம் பேச தயங்குவது ஏன்? கா்நாடக முதல்வரிடம் பேசி காவிரி நீரைக் கேட்க நேரமில்லாத முதல்வா் விஜய்க்கு, திரையரங்கம் சென்று படம் பாா்க்க மட்டும் நேரமுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments