தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!
சென்னை மெரீனா கடற்கரை நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருப்பது பற்றி...
நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மெரீனா கடற்கரைக்குச் செல்லும் நுழைவு வாயில்களைக் காவல்துறையினர் மூடியுள்ளனர்.
நீட் தேர்வு குளறுபடிக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜிநாமா செய்யக் கோரி தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டிலும் கடந்த மூன்று நாள்களாக நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ) உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் எனக் கருதி, 2 துணைக் காவல் ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் மெரீனா கடற்கரைக்குச் செல்லும் அனைத்து நுழைவு வாயில்களையும் காவல்துறையினர் மூடியுள்ளனர்.
மேலும், மெரீனா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு காவல்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.
Protest Intensifies - Marina beach Entrances Closed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.