FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அக். 3 நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்! தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தள்ளிவைப்பு!

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு...

4 செப்டம்பர் 2026, 3:49 pm IST
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - x / N anand
பகிர்:

அமைச்சர்களின் பேச்சுவார்த்தையையடுத்து தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் நேரடியாகப் பெறுவதற்கு சந்திப்பு நேரம் ஒதுக்கக் கோரியும் சென்னையில் உழைப்பவர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 2 வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட கிழக்குப் பகுதி வாயிலில் போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement

Advertisement

பின்னர் சென்னை ரிப்பன் அலுவலக கட்டடத்தில் உழைப்பவர் உரிமை இயக்க சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதன்பின்னர் சங்க நிர்வாகி பேசுகையில், "அமைச்சர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உணவுப்படி வழங்குவதாகவும் பெண் பணியாளர்களுக்கு கழிப்பறை, ஓய்வறை ஏற்படுத்தி தருவதாகவும், கடந்த ஆட்சிகளில் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்வதாகவும் தூய்மைப் பணிகளுக்கு புதிய 300 வாகனங்கள் வழங்கவும் ரெயின் கோட், மாஸ்க், கையுறை முறையாக வழங்குவதாகவும் மற்றும் மகப்பேறு & வார விடுப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து கூறுவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

அக். 3 ஆம் தேதி 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். அதை எதிர்நோக்கி இருக்கிறோம். அதுவரை இந்த போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது" என்று கூறினார்.

summary

sanitation workers protest in Chennai is being postponed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments