FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜன நாயகன் பார்க்கையில் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது: அமைச்சர் விக்னேஷ்

ஜன நாயகன் படத்தை பார்க்கும் போது கண்கலங்கியது குறித்த விமர்சனங்களுக்கு அமைச்சர் விக்னேஷ் அளித்த பதில்....

Updated On : 24 ஜூலை 2026, 6:10 pm IST
அமைச்சர் விக்னேஷ்...
பகிர்:

ஜன நாயகன் படம் பார்க்கையில் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துளளார்.

இதுகுறித்து அவர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு உணர்வு இருக்கும். 30 வருடமாக சின்ன வயதில் இருந்து அவரை திரையில் பார்த்து வளர்ந்தவர்கள். ஒவ்வொரு வருடமும் திரையில் பார்க்கக்கூடிய ஒரு முகம். எல்லாரிடமும் ஒரு குழந்தைத் தனம் இருக்கும்.

திரையில் பார்த்து பழகுன முகம். இனிமேல் அவர் திரையில் வரமாட்டார் என்பதை நினைக்கும்போது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. விடியோ எடுத்தது எனக்குத் தெரியாது. தளபதி எங்களுக்கு எப்பவும் தளபதிதான். இதை விவாதப் பொருளாக ஆக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

முதல்வர் ச. ஜோசப் விஜய் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஜன நாயகன்' திரைப்படம் நேற்று வெளியானது. படத்தை திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது அமைச்சர்கள் ஜா. முகமது பர்வேஸ், விக்னேஷ் ஆகியோர் கண்ணீர் சிந்தினர். இதுதொடர்பான விடியோக்கள் இணையதளங்களில் வெளியான நிலையில் அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார்.

summary

Minister Vignesh stated that tears welled up in his eyes without his knowledge while watching the movie Jana Nayagan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments