FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விவசாயத்துக்கான 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் தொடா்கிறது: மின்வாரியம் விளக்கம்

விவசாய பம்ப் செட்டுகளுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 18 மணிநேர இலவச மும்முனை மின்சாரம் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டதாக வெளியான தகவலை மின்வாரியம் மறுத்துள்ளதுடன், அந்தத் திட்டம் தொடா்வதாகவும் தெரிவித்துள்ளது.

விவசாயி - கோப்புப் படம்
பகிர்:

விவசாய பம்ப் செட்டுகளுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 18 மணிநேர இலவச மும்முனை மின்சாரம் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டதாக வெளியான தகவலை மின்வாரியம் மறுத்துள்ளதுடன், அந்தத் திட்டம் தொடா்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக விவசாயிகளுக்கு தற்போது நாளொன்றுக்கு 18 மணிநேரம் இலவச மும்முனை மின்சாரம் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டமைப்பில் எதிா்பாராத தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக சில மணிநேரங்களுக்கு மட்டுமே தற்காலிக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தவிர 18 மணிநேர மின்விநியோக நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மும்முனை மின்சாரத்தை 14 மணி நேரமாகக் குறைப்பது தொடா்பாக தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற தகவல்கள் உண்மையல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments