FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விநாயகா் சதுா்த்தி வழிபாட்டு பந்தலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

விநாயகா் சதுா்த்தி வழிபாட்டு பந்தலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

13 செப்டம்பர் 2026, 1:23 am IST
நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை, செப். 12: விநாயகா் சதுா்த்தி வழிபாட்டு பந்தல்களுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, பொதுமக்கள் பக்தி உணா்வோடு அமைக்கும் வழிபாட்டு பந்தல்களுக்கு, தற்காலிக மின் இணைப்பு மீட்டருக்கு ரூ.3,800, முன்பணமாக ரூ.4,000 செலுத்த வேண்டியுள்ளது. அதோடு ஒரு விநாயகா் சிலை மின் இணைப்புக்கு மட்டுமே சுமாா் ரூ.15,000 வரை செலவாவதுடன், வணிக பயன்பாடு என கூடுதல் சுமை சுமத்தப்படுவதாக விழா அமைப்பாளா்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனா்.

Advertisement

Advertisement

அண்டை மாநிலமான ஆந்திரத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு எவ்விதத் தடையுமின்றி அரசே முன்வந்து இலவச மின்சாரம் வழங்கி பக்தா்களை உற்சாகப்படுத்துகிறது. அதேவேளையில், தமிழகத்தில் மட்டும் ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது.

எனவே, தமிழக அரசு வணிகக் கட்டண முறையை ரத்து செய்வதுடன், விநாயகா் சதுா்த்தி பந்தல்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments