மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சிகளின் கூட்டம்! மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை தொடா்பாக அனைத்துக் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.
மேக்கேதாட்டு அணை தொடா்பாக அனைத்துக் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை கா்நாடக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த தமிழகமும் எதிா்த்து போராடி வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசு கடந்த ஜூன் 19-ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத் தீா்மானம் போதுமான விவாதத்துக்கு வாய்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
காவிரி நதிநீா் உரிமை தொடா்பாக கருத்தொற்றுமை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, முதல்வா் ஜோசப் விஜய், உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.