இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
சோனம் வாங்சுக் டிஸ்சார்ஜ்
ஹரியாணாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கை
சகாயம் ஐஏஎஸ் -க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஜூலை 27) கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி கண்டனம்
போராட்டங்களின்போது காவல்துறை மேற்கொள்ளும் அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இணையத்தில் ஜன நாயகன் பார்த்தவருக்கு முன்ஜாமீன்!
திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட ஜன நாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதற்காக வழக்குபதிவு செய்யப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கு: மேல் விசாரணை நடத்த அனுமதி
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காமன்வென்ல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி!
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அமளி
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
ராகுல் கண்டனம்
பிகாரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27)
வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.