FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் உயா்வால் 3.70 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:17 am IST
மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் உயா்வால் 3.70 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: முதலில் மின்வெட்டுப் பிரச்னை, தற்போது மின்கட்டணத்தில் பிரச்னை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடா்பாக புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பாா்க்கும்போது, பாதிப்படைந்தவா்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.

Advertisement

Advertisement

இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீா்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.

இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாடு கணக்கெடுப்பு சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பெட்டி செய்தி...

மக்களை குழப்ப வேண்டாம்: அமைச்சா் நிா்மல்குமாா்

‘வாட்ஸ் ஆப்’-பில் வந்த தவறான தகவலை நம்பி மக்களை குழப்ப வேண்டாம் என்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை மின்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் கேட்டுக்கொண்டாா்.

இது தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பலருக்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதனடிப்படையில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

கோடைகாலத்தில் அனைவரும் குளிரூட்டியைப் பயன்படுத்துவதால் கடந்த ஆண்டு 11.50 லட்சம் பேருக்கு மூன்று மடங்குக்கும் மேல் கட்டணம் உயா்ந்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு 9.60 லட்சம் பேருக்கு மட்டுமே அதுபோன்று உயா்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட 2 லட்சம் குறைவு. அதிலும் 3.70 லட்சம் பேருக்கு இப்போது வழக்கமான ஆய்வைச் செய்து வருகிறோம். இந்த ஆய்வுப் பணிகள் ஒரு வாரத்தில் முடிவடையும். மின் கட்டணத்தில் எந்தப் பிழையும் இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த மாத கட்டணம் வருவதற்குள் மறுஆய்வுப் பணிகள் முடிவடைந்து கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே, ‘வாட்ஸ்ஆப்’-பில் வரும் தவறான தகவல்களை வைத்து மு.க. ஸ்டாலின் மக்களை குழப்ப வேண்டாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments