சிறைச்சாலை, நூலகத்துக்கு 5 ஆயிரம் புத்தகங்கள்: மு.க. ஸ்டாலின் வழங்கினார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின 5 ஆயிரம் புத்தகங்கள் வழங்கியது பற்றி...
பாளையங்கோட்டை சிறைச்சாலை, தாம்பர நூலகத்துக்கு 5 ஆயிரம் புத்தகங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
கற்றனைத்து ஊறும் அறிவு
Advertisement
Advertisement
2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதுவரை இப்படி பெறப்பட்ட 6 லட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன்.
புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்! என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.