மேக்கேதாட்டு அணை விவகாரம்! தமிழ்நாட்டில் 30, 40 ஆண்டுகளாக எதிர்ப்புதான்: டி.கே. சிவகுமார்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் யார் இருந்தாலும் அரசியல் செய்வார்கள் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேச்சு
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் யார் இருந்தாலும் அரசியல் செய்வார்கள் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் செய்தியாளர்களுடன் மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதாவது, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தில் 30, 40 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் செய்வார்கள். இதில் புதிதாக ஏதுமில்லை.
Advertisement
Advertisement
இருப்பினும், அணை விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஆகையால், சட்டம், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தவெக ஆட்சியமைத்திருப்பதால், மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடக காங்கிரஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், டி.கே. சிவகுமார் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பானவற்றில் காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான டி.கே. சிவகுமாரின் நிலைப்பாடு காரணமாகவே, அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.
Karnataka CM DK Shivakumar said opposition to the Mekedatu project is nothing new
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.