லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள்!
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசியது...
லஞ்சம், போதைப்பொருள் புழக்கம் இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில். இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் உள்பட 35 பேர் இதில் இடம்பெற்றுள்னா்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று(ஜூன் 5) காலை முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்,
"இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் அனைத்துத் துறைகளுக்கும் தொலைநோக்கு திட்டங்களைக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு துறைக்கும் இலக்குகள் என்ன என்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகளோடு இணைந்து கலந்தாலோசித்து இதுபற்றி முடிவெடுப்பார்கள். விரைவாக செயல்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகள் திட்டமிடுவார்கள். புதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில் இளைஞர்கள் மேம்பாடு, மகளிர் மேம்பாடு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வளர்ச்சி, லஞ்சம் இல்லாத நல்லாட்சி, போதை இல்லாத தமிழகம் மற்றும் அனைத்துத் துறைகளுக்கும் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டதையும் சேர்த்து மொத்தம் 436 திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கஞ்சா, குட்கா, போதைப் பொருள்கள் என கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. அதன் விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இதையடுத்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
A corruption free and drug free govt: CTR nirmal kumar press meet after TN cabinet meeting
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.