மத்திய அமைச்சர் பதவிக்காக அதிமுகவை பாஜகவுடன் இணைப்பாரா இபிஎஸ்?
அமைச்சர் பதவிக்காக அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் இபிஎஸ் தயங்க மாட்டார் என நிர்மல் குமார் விமர்சனம்
அதிமுக தலைமையின் மீதான நம்பிக்கையின்மையால்தான் அதிமுகவினர் தவெகவில் இணைவதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "அதிமுக தலைமை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அடுத்த சில ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் பதவியை பாஜக அளித்தால், அதிமுகவை பாஜகவுடன் இணைக்கும் பணியைக்கூட அவர் தயங்காமல் செய்வார்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலையில்தான் அவர் இருக்கிறார். அதனால்தான், அதிமுகவில் 40 - 50 ஆண்டுகளாக உழைத்த தொண்டர்கள், இன்று கைவிடப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் நம்பி உழைத்தவர்கள், 'இன்று அந்தப் பாதையை மறந்து, திமுகவுடனேயே கூட்டணிசேர வேண்டும் என்று முயற்சித்த எடப்பாடி பழனிசாமியை எப்படி நம்பி பயணிக்க முடியும்' என்று கேட்கின்றனர்.
இப்போது அங்கிருப்பவர்களெல்லாம், குறுநில மன்னர்களாக ஆங்காங்கே கட்சியைக் கைப்பற்றி, தங்கள் சொத்துகளைக் காப்பாற்றவே அதிமுகவை பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே, திமுகவினர் கதவினை மூடிக்கொண்டு வெளியே வருவதேயில்லை. கருணாநிதி குடும்பமாக இருந்து, ஸ்டாலின் குடும்பமாக மாறி, தற்போது உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தின் கதவுகளைத் தேடிக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
Is Edappadi Palaniswami merging the AIADMK with the BJP for the sake of a Union Minister post?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.