தவெக அரசு பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம்-ஒழுங்கில் என்ன பிரச்னை வந்தது? செங்கோட்டையன்
மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கில் ஒரு பிரச்னையும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாநிலத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம்-ஒழுங்கில் பிரச்னை ஏதுமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "கேள்வி கேட்பது மட்டுமின்றி, எங்கே தவறு நடக்கிறதோ அதனைச் சுட்டிக்காட்டினால், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கில் ஒரு பிரச்னையும் இல்லை. பொறுப்பேற்ற 20 நாள்களில் என்ன பிரச்னை வந்தது? உங்கள் வீட்டில் என்ன கஷ்டம்?
Advertisement
Advertisement
இந்த அரசு, 6 மாத காலத்துக்குத் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும், அதற்குப் பிறகுதான் கேள்வி கேட்போம் என்று எதிர்க்கட்சிகள் சொன்னார்கள்.
பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம் - ஒழுங்கில் கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்தப் பகுதியில் நடந்த குற்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றத்தில் சம்பந்தப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனில், அதற்கான பாதுகாப்பு அரணை உருவாக்க வேண்டும். அதற்கானவற்றை முதல்வர் படிப்படியாக செய்து வருகிறார். அதற்கு குறிப்பட்ட கால அவகாசம் வேண்டும்" என்று தெரிவித்தார்.
Minister KA Sengottaiyan has stated that there are no issues regarding the state's law and order
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.