திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மாா்க்சிஸ்ட் கம்யூ. கருத்து...
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியைத்தான் விரும்புகின்றனர். எனவே, இங்கு கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நிலையே தொடரும்.
இதுவே மக்கள் விருப்பம். இந்த விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அரசு அனுமதிக்காது என்று மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
“திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்துக்கு இடம் கொடுக்காமல் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் குறித்து உறுதியான நிலையை அரசு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
P. Shanmugam, State Secretary of the Communist Party of India (Marxist), has stated that the Tamil Nadu government's announcement regarding the lighting of the lamp at Thiruparankundram is welcome.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.