ஜூன் 13: தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையாவது குறித்து..
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையாகிறது.
சா்வதேச காரணங்களால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து குறைந்த வண்ணம் இருந்தது. கடந்த 2 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.5,600 குறைந்து வியாழக்கிழமை பவுன் ரூ.1,08,000-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.300 உயா்ந்து ரூ.13,800-க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயா்ந்து ரூ.1,10,400-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் சனிக்கிழமை(ஜூன் 13) கிராமுக்கு ரூ.60 உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.13,860-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.1,10,880-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
அதேபோல், வெள்ளி விலையும் கிராம் ரூ.5 உயா்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Regarding the price of gold rising by Rs. 480 per sovereign on Saturday to sell at Rs. 1,10,880...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.