முகப்பு
தமிழ்நாடு

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம்

அதிமுகவில் 3 பேருக்கு கொள்கை பரப்பு துணைச்செயலர் பதவி வழங்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Updated On : 26 ஜூன் 2026, 7:25 pm IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

அதிமுகவில் 3 பேருக்கு கொள்கை பரப்பு துணைச்செயலர் பதவி வழங்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எதிர்க்கோட்டை S.G. சுப்பிரமணியனும்(முன்னாள் எம்எல்ஏ), கட்சி மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் V.M. ராஜலெட்சுமியும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் மற்றும் கட்சி மகளிர் அணி இணைச் செயலாளராகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள்

* S.M. சுகுமார், M.L.A., (இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் )

* எதிர்க்கோட்டை S.G. சுப்பிரமணியன், Ex. M.LA., (சாத்தூர் தொகுதி, விருதுநகர் கிழக்கு மாவட்டம்)

* K.C. பழனிச்சாமி, B.Com., (சூரியம்பாளையம் பகுதிக் கழகச் செயலாளர், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர்)

கட்சி மகளிர் அணி இணைச் செயலாளர் : V.M. ராஜலெட்சுமி (கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர்)

கட்சி உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

summary

AIADMK General Secretary Edappadi K. Palaniswami has issued an announcement appointing 3 individuals to the post of Propaganda Deputy Secretary in the party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments