சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் அவசரகால கதவைத் திறந்த பயணி கைது
சார்ஜாவில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் தரையிறங்கும் போது அதன் அவசர கால கதவை திறந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சார்ஜாவில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் தரையிறங்கும் போது அதன் அவசர கால கதவை திறந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
231 பயணிகளுடன் ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியபோது அதன் அவசர கால கதவுகளில் ஒன்றை புதுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயது இளைஞர் திறந்தார்.
உடனடியாக விமானத்தை நிறுத்தி அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். வெடிகுண்டு நிபுணர்கள், ஆயுதமேந்திய அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் விமானம் நின்ற இடத்திற்கு விரைந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விமானி முறைப்படி புகார் அளித்தார்.
Advertisement
Advertisement
பாதுகாப்புப் படை வீரர்கள் விமானத்தில் ஏறி, அந்தப் பயணியைக் கைது செய்து காவலில் எடுத்தனர். அந்தப் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது மனநிலையும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது.
Tension prevailed for a while when a passenger opened one of the emergency exit doors while the flight was taxiing at Chennai International Airport.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.