வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் பதவிகள் பறிப்பு! - இபிஎஸ்
தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. 17 மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்களை எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் நத்தம் ரா. விசுவநாதன், தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் எஸ்.பி. வேலுமணி, அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் சி.வி. சண்முகம், அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் ஆர். காமராஜ், அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் சி. விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் பி. தங்கமணி அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.பி. அன்பழகன், அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் பா. பென்ஜமின் உள்ளிட்டோர் இன்று(மே 13) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
Advertisement
Advertisement
விழுப்புரம், கோவை புறநகர் தெற்கு, புதுக்கோட்டை வடக்கு, நாமக்கல், திருவாரூர், திருவள்ளூர் மத்தி, ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, திருப்பத்தூர், கடலூர் வடக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர், திருச்சி மாநகர், கரூர், தேனி மேற்கு, திருநெல்வேலி புறநகர் ஆகிய மாவட்டங்களின், மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி. சண்முகம் தரப்பு அணியிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சிக்க்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், அவர்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.
The posts held by former AIADMK ministers including Velumani, C.V. Shanmugam, and C. Vijayabaskar have been stripped.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.