FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து...

தமிழக அரசு - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநகர காவல் ஆணையராக இருந்து வந்த அபின் தினேஷ் மோடக், சிபிசிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருவதுடன், பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக, அமல்ராஜ் வியாழக்கிழமை சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றி வந்த இவா், கடந்த ஏப்ரலில் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு கட்டாய காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தமிழக அரசின் புதிய உத்தரவின்படி அமல்ராஜ் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்கவுள்ளாா்.

இந்த நியமனம் காவல்துறையில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

summary

The Tamil Nadu government has issued an order appointing A. Amalraj as the Chennai City Police Commissioner.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments