நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 4 அமைச்சர்கள்!
நாமக்கல் மாவட்டத்திலிருந்து 4 அமைச்சர்கள் பதவியேற்றது குறித்து...
தமிழ்நாடு அமைச்சரவையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து மட்டும் 4 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த நிலையில், 35 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து மட்டும் 4 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
அமைச்சரவையின் முதற்கட்ட பதவியேற்பு நிகழ்ச்சியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் (திருச்செங்கோடு) பதவியேற்றுக் கொண்டார்.
அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி (பால்வளத் துறை), ராசிபுரம் எம்எல்ஏ லோகேஷ் தமிழ்ச்செல்வன் (வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை), அவிநாசி எம்எல்ஏ கமலி (கால்நடைத்துறை) ஆகியோர் பதவியேற்றனர். கமலி, திருப்பூர் அவிநாசி தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தாலும், அவரும் நாமக்கலை சேர்ந்தவர்தான்.
Four Ministers in Namakkal District Alone
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.