தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்
அதிமுகவில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து இசக்கி சுப்பையா விளக்கம்...
தொகுதி மக்களின் நலனுக்காக அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்ததாக இசக்கி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை பனையூரில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் இசக்கி சுப்பையா பேசியதாவது:
யாரையும் குறைசொல்ல நான் விரும்பவில்லை. ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட வேண்டாம். நான் யாரிடமும் கையூட்டு பெறவில்லை, இனியும் பெறமாட்டேன்.
Advertisement
Advertisement
இப்போது இருக்கும் முதல்வர் நான் நினைப்பதை செய்கிறார். அவருடன் இருந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும். தொகுதி மக்களுக்காக தவெகவில் இணையும் முடிவை எடுத்தேன்.
முதல்வர் விஜய்க்கு கீழ் செயல்படும் கட்சியில் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாய்ப்பு தந்தால் அம்பாசமுத்திரத்தில் மீண்டும் போட்டியிடுவேன்.
கடந்த 5 ஆண்டுகளில் எதனையுமே செய்யவில்லை. அதனால், தொகுதி மக்களின் நலனுக்காக தவெகவில் இணைந்துள்ளேன். குதிரை பேரம் என்றால் என்ன என்று இரவு முழுவதும் யோசித்தேன். பதில் கிடைக்கவில்லை என இசக்கி சுப்பையா பேசினார்.