FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழக காவல்துறை அதிரடி! 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைது

தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைது செய்யப்பட்டது குறித்து...

தமிழக காவல்துறை அதிரடி... - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 1,049 ரௌடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாநிலத்தில் சமீபமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

Advertisement

Advertisement

இதனிடையே, தீபாவளி திருநாளில் மட்டும் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் 9 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் புழக்கம், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மற்றும் ஈடுபட்டோர், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் தணிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக களம் இறங்கினர்.

இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் 1,049 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

summary

1,049 rowdies arrested in Tamil Nadu over the last 3 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.