FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குழந்தைகளுக்கு கேக் ஊட்டும் முதல்வர், செஞ்சி சிறுமி பெற்றோருக்கு ஏன் ஆறுதல் கூறவில்லை? கனிமொழி

காணாமல் போன செஞ்சி சிறுமி குடும்பத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆறுதல் கூறியது பற்றி...

செஞ்சி சிறுமி குடும்பத்துக்கு கனிமொழி ஆறுதல் - X
பகிர்:

காணாமல் போன செஞ்சி சிறுமி குடும்பத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ஏழு வயது சிறுமி ஹேமலதா, அக். 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனாா். 34 நாள்களாகியும் இதுவரை அவா் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று அந்த சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"ஒரு குழந்தையைக் காணவில்லை என்றால், 24 மணி நேரத்தில் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் 'கடத்தல்' என்ற வகையில்தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் செஞ்சி சிறுமி விவகாரத்தில் இன்னும் 'மிஸ்ஸிங்' என்றே வழக்குப்பதிவு இருக்கிறது.

குழந்தைகள் நலம், காவல்துறை இரண்டும் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகள். இதே குழந்தைகளை பார்த்து 'நண்பா நண்பி' என்று கூறி அவர்கள் மூலமாக வாக்குகள் வாங்கியிருக்கிறார். கேக் ஊட்டும் முதல்வர் இந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்கலாம். பொறுப்பு அமைச்சராவாது வந்து ஆறுதல் வார்த்தை சொல்லியிருக்கிறார்களா?

தவெகவினர் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இருக்கிறார்களே தவிர, இந்த குழந்தையைக் கண்டுபிடிக்க எந்த சரியான முயற்சியும் செய்யவில்லை" என்று கூறினார்.

summary

CM vijay did he not meet parents of the young girl from Gingee: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.