நாட்டின் சிறந்த முதல்வராக விஜய் நிரூபிப்பார்: மிஷ்கின்
நாட்டின் சிறந்த முதல்வராக விஜய் நிரூபிப்பார் என இயக்குநர் மிஷ்கின் கூறியது குறித்து...
நாட்டின் சிறந்த முதல்வராக விஜய் நிரூபிப்பார் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசியதாவது, "முதல்வர் விஜய்யை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். மனிதநேயமிக்க சிறந்த மனிதராகத்தான் அவரை நான் பார்க்கிறேன்.
அவருக்கு அனுபவம் இல்லை என பலரும் கூறுகின்றனர். அவர் எதையும் சிறப்பாகக் கற்றுக் கொள்வார். இந்தக் காலத்தில் உள்ள அனைத்தையும் மிகச் சிறந்த முறையில் கற்றுக்கொண்டு, மக்கள் கொடுத்த அன்பை, அவர் திருப்பி பூர்த்தி செய்வார் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
Advertisement
Advertisement
அனைத்தையும் அவர் சிறப்பாகச் செய்வார், செய்து கொண்டிருக்கிறார். நிறைய பிரச்னைகளை அவர் கவனமாக கையாண்டு வருகிறார்.
விஜய்தான் நாட்டின் சிறந்த முதல்வர் என நினைக்கிறேன். இந்தியாவின் மிக முக்கியமான சிறந்த முதல்வர் என அவர் நிரூபிப்பார்.
தமிழ் மக்கள் இவ்வளவு பெரிய பதவியையும், ஒட்டுமொத்த அன்பையும் அவருக்கு அளித்திருக்கின்றனர். அவர்களுக்கு நிச்சயமாக நல்லது செய்வார்" என்று தெரிவித்தார்.
Vijay will prove to be the best Chief Minister in the country, says Director Mysskin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.