முகப்பு

தொகுதி மறுவரையறையைத் தீர்மானிக்கும் இடத்தில் திமுக? மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றத்தில் திமுகவின் முடிவு கவனம் பெறுவது குறித்து...

23 வினாடிகள் முன்பு
தொகுதி மறுவரையறையைத் தீர்மானிக்கும் இடத்தில் திமுக? மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!
மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை - PTI
பகிர்:

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு கோரிய நிலையில், நிபந்தனைகளுடன் ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்தது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக எம்.பி.க்கள் 22 பேருடன், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியில் 8 பேரும், ஒய்எஸ்ஆர்சிபி கட்சியில் 4 பேரும் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதன் மூலம் மசோதாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் ஆதரவு வாக்குகள் 320 பேருடன் திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), ஒய்எஸ்ஆர்சிபி கட்சியும் சேர்த்து 354 வாக்குகள் ஆதரவு கிடைக்கிறது.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தெரிவித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், மமதா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதி மறுவரையறை மசோதாவைத் தீர்மானிக்கும் இடத்தில் திமுக உள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

summary

DMK president MK Stalin meets INDIA bloc leaders at his Chennai residence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.