FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: புகார் எண்கள் அறிவிப்பு!

கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக, புகார் தெரிவிக்க உதவி எண்கள்.

தனியார் பேருந்துகள் - பிரதிப் படம்
பகிர்:

தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக, புகார் தெரிவிக்க, உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (02.10.2026 முதல் 21.10.2026 வரை) பொதுமக்கள் வெளியூர்களுக்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக புகார் பெறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

போக்குவரத்து அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள், மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழக சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் மற்றும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு தொலைபேசி எண் வாயிலாக தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்க வேண்டப்படுகிறது.

தொலைபேசி எண்: 9384808333 / 1800 425 6151

புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in

summary

The Tamil Nadu government has announced helpline numbers for lodging complaints regarding the collection of excess fares on private omni buses.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments