FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராஜர்! முதல்வர் விஜய் புகழாரம்

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி முதல்வர் விஜய்யின் பதிவு ...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தபோது... - கோப்புப்படம்
பகிர்:

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி முதல்வர் விஜய் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் இன்று (அக். 2) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் பலரும் காமராஜரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,

Advertisement

Advertisement

"எளிமையான வாழ்க்கையாலும், நேர்மையான நிர்வாகத்தாலும் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!

கிராமந்தோறும் பள்ளிகளைத் திறந்து, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்விப் புரட்சிக்கு வித்திட்டதோடு, எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள், அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி, தொழில் முன்னேற்றத்திற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர்.

தன்னலமற்ற பொதுச் சேவைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த கர்மவீரரின் ஒப்பற்ற தியாகத்தைப் போற்றி அவர் காட்டிய நல்வழியில் தொடர்ந்து பயணிப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Kamarajar sowed the seeds of the educational revolution: Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments