தேனாம்பேட்டை மெட்ரோ அருகே தனியார் நிறுவனக் கட்டடத்தில் தீ விபத்து!
தேனாம்பேட்டை மெட்ரோ அருகே தனியார் நிறுவனக் கட்டடத்தில் தீ விபத்து பற்றி..
சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
தீ விபத்து குறித்து அறிந்ததும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் முதலில் தீப்பற்றியதாகவும், பின்னர் தீ கட்டடத்திற்கும் பரவத் தொடங்கியதாகவும் தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தீயை அணைக்கும் பணிக்காக தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான உண்மையான காரணம், சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.