114 கி.மீ தூரம் சாலைவலம் செல்லும் முதல்வர் விஜய்! மாருதி நகரில் பிரசாரம் தொடக்கம்!
முதல்வர் விஜய் மாருதி நகரில் பிரசாரத்தை தொடங்கியிருப்பது தொடர்பாக...
தாராபுரம் தொகுதியில் இன்று(அக். 4) பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய், 114 கி.மீ தூரம் சாலைவலம் செல்கிறார்.
தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் சி. ஜோசப் விஜய், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று(அக். 4) சாலைவலம் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வருகைத்தந்துள்ளார்.
Advertisement
Advertisement
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வந்தார்.
தாராபுரத்தில் மேட்டுக்கடை பகுதியிலிருந்து தாசர்புரம் வரையில் 114 கி.மீ தொலைவுக்கு சுமார் 30 இடங்களில் சாலை வலம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
மாருதி நகரில் சாலைவலத்தைத் தொடங்கியுள்ள முதல்வர் விஜய், உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு, காவல்நிலையம் சந்திப்பு, ஐந்து சாலை சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், வஞ்சியம்மன் கோயிலில் நிறைவு செய்கிறார்.
மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் சி. ஜோசப் விஜய் சாமி தரிசனம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Chief Minister Vijay, who is campaigning in the Dharapuram constituency today (Oct. 4), is undertaking a 114-km roadshow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.