FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பூமி முழுக்க ரத்தக்கோளமாக மாறியிருக்கிறது! மேலும் தீவிரமடையும் சூப்பர்-டூப்பர் எல்நினோ!!

பூமி முழுக்க ரத்தக்கோளமாக மாறியிருக்கும் வரைபடம் வெளியீடு, மேலும் தீவிரமடையும் சூப்பர்-டூப்பர் எல்நினோ!!

32 வினாடிகள் முன்பு
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் முனைவர் வி.ஆர். துரை. - பிரதி படம்ட
பகிர்:

பசிபிக் பெருங்கடலில் உருவாகியிருக்கும் வலுவான சூப்பர்-டூப்பர் 'எல் நினோ' தீவிரமடையும் நிலை உருவாகியுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எல்நினோ தீவிரமடைவதற்கு முன்பே, ஒட்டமொத்த பூமியும் ரத்தக் கோளமாக சிவப்பு நிறத்துக்கு மாறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எல்நினோ காரணமாக, பசிபிக் பெருங்கடல் உருவாகியிருந்த பெருமளவிலான வெப்பம் வெளியேறும் நிகழ்வால், பூமியின் பரந்த பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான வெப்பமான சூழல் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்நினோ முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலையை எட்டியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

டிசம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño) நிகழ்வு, அதற்கு முன்னதாகத் தொடர்ந்து வலுவடைந்துகொண்டேயிருக்கும் என்று உலக வானிலை ஆய்வு மையம் (WMO) வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது.

வரவிருக்கும் மாதங்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை மற்றும் மழையளவை எல்நினோ கடுமையாக பாதித்து கடும் வெப்பம் அல்லது அதிகனமழையை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை நிலவுவதற்கான அதிக சாத்தியக்கூறைக் குறிக்கும் வகையில், உலகின் பரந்த பகுதிகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வரைபடங்களை வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அந்த புதிய வரைபடம், ஒட்டுமொத்த பூமியும் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. எல்நினோ தொடர்ந்து அதன் உச்சபட்ச சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதால் இது காலநிலையை வெகுவாக மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments