படையெடுக்கும் பரிசுப் பொருள்கள்... வீட்டைக் காலி செய்த இன்ஸ்டா பிரபலம்!
இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் தொடர்ந்து பரிசுப் பொருள்களை அனுப்புவதால் இன்ஸ்டா பிரபலம் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் தொடர்ந்து பரிசுப் பொருள்களை அனுப்புவதால் இன்ஸ்டா பிரபலம் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் நகைச்சுவையாகவும், பிறரைத் திட்டியும் விடியோக்களைப் பதிவிட்டு பிரபலமானவர் வீரமணி. இவரின் பல விடியோக்கள் இவரது மதுரை பாணி பேச்சுக்காக பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.
இன்ஸ்டாகிராமில் இவரை 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடகின்றனர். இவரைப் பின் தொடர்வோர் சமீபத்தில் அவருக்குக் கொடுத்த விநோதமான தொந்தரவு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
Advertisement
Advertisement
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரம், யூடியூப் என தனித்தனி சமூக ஊடகக் கணக்குகள் வைத்துள்ள இவர், சில நாள்களுக்கு முன் கேரளா சுற்றுலா செல்வதற்குப் பணம் கேட்டு விடியோ பதிவிட்டிருந்தார். அதில், அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு க்யூஆர் கோட் ஒன்றை பகிர்ந்திருந்தார் வீரமணி.
அதில் ரூ. 6,000 வரை அனைவரும் அனுப்பிய நிலையில், தனது சுற்றுலா விடியோக்களை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்திருந்தார்.
இதன் பின்னர், இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடர்வோரிடம் ’ஸ்வீட் பாக்ஸ்’ அனுப்புமாறு கேட்டு தனது வீட்டு முகவரியை வீரமணி பகிர்ந்திருந்தார். அதுவே அவருக்கு வினையாக அமைந்தது.
நெட்டிசன்கள் அவருக்கு விளையாட்டாக அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணைய விற்பனை தளங்களில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் பல பொருள்களை அனுப்பியுள்ளனர்.
அதிகாலையில் பால் டெலிவரி முதல், டிவி, பிரிட்ஜ் என லட்சக்கணக்கில் பல பொருள்களை ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் அவருக்கு ஆர்டர் செய்து அனுப்பியுள்ளனர்.
இதனால், கடுப்பான அவர் ’இவ்வளவு பொருள்களை ஏன் அனுப்புகிறீர்கள். தயவு செய்து இதுபோல எதையும் அனுப்பாதீர்கள்’ எனத் தொடர்ந்து விடியோ பதிவிட்டு தனது ஆதங்கத்தைத் தெரிவித்து வந்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் எல்லை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் அவ்வாறு டெலிவரி செய்யப்பட்டதால், டெலிவரி செய்ய வருவோர் இவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதில் உச்சக்கட்டமாக ஒருவர் ரூ. 70 லட்சத்திற்கு பீரங்கி ஒன்றை ஆர்டர் செய்ததாக அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்து கோபமாக விடியோ பதிவிட்டிருந்தார் வீரமணி. அதேபோல, கிட்னி சென்டரில் கிட்னி தானமாகத் தருவதாக இவரது தொலைபேசி எண்ணை யாரோ ஒருவர் பகிர்ந்ததாகவும் அவர் விடியோ வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, டெலிவரி செய்ய வருவோர் தன்னை அடிக்க வருவதாகக் கூறி தனது வீட்டை விட்டு வெளியேறிய அவர், வெளியூர் செல்வதாகப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் பகிர்ந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
டெலிவரி வேலை செய்பவர்களுக்கு இதுபோன்ற விளையாட்டான செயல்களால் தொல்லை ஏற்படுவதாக ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பலரும் அவருக்கு தொடர்ந்து பொருள்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
An Instagram celebrity has moved out of their home because followers keep sending gifts.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.