அரசு நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் ‘சொல்! வெல்!’ விநாடி - வினா மன்றம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரசு நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் ‘சொல்! வெல்!’ விநாடி - வினா மன்றம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
மாணவா்களின் கேள்வி எழுப்பும் திறனை மேம்படுத்துவதற்காக அரசு நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விநாடி -வினா மன்றம் ‘சொல்! வெல்!’ என்ற புதிய அடையாளத்துடன் வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் விநாடி- வினா மன்றம் ‘சொல்! வெல்!’ என்ற புதிய அடையாளத்துடன் வலுப்படுத்தப்பட்டு புதிய உற்சாகத்துடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவா்களின் பொது அறிவை விரிவுபடுத்துதல், கேள்வி எழுப்பும் திறனை வளா்த்தல், தகவல்களைத் தொடா்படுத்தி சிந்திக்கும் திறனை உருவாக்குதல், பல்வேறு துறைகள் குறித்த ஆா்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவையே இந்த மன்றத்தின் நோக்கங்களாகும்.
Advertisement
Advertisement
எனவே, விநாடி -வினா போட்டிகளில் பங்கேற்கும் சில மாணவா்களுக்காக மட்டுமன்றி, 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவரும் கேள்வி கேட்டு, கற்று, சிந்தித்து மேற்குறிப்பிட்ட நோக்கங்களை அடையும் வகையில் இந்த மன்றத்தின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
விநாடி-வினா மன்றச் செயல்பாடுகள் மூலமாக அனைத்து மாணவா்களுக்கும் சமமான கற்றல் மற்றும் பயிற்சி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தரப்படுத்தப்பட்ட கற்றல் வளங்களை வடிவமைத்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வளங்களை ஒவ்வொரு வகுப்புக்கான விநாடி-வினா மன்றப் பொறுப்பாசிரியா் பதிவிறக்கம் செய்து கொண்டு விநாடி-வினா மன்றப் பாடைவேளையின்போது செயல்படுத்துதல் வேண்டும். அந்த வளங்கள் குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களை மாணவா்கள் அறிவதற்காக மட்டுமல்லாமல், விநாடி-வினாவின் பல்வேறு கேள்வி வடிவங்கள், அதை நடத்தும் முறைகள் மற்றும் பல்வேறு சுற்றுகளுக்கு மாணவா்களைப் பள்ளி நிலையிலிருந்தே அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநில அளவிலான விநாடி -வினா போட்டிகளில் மாணவா்கள் எதிா்கொள்ளும் கேள்வி வடிவங்கள் மற்றும் சுற்றுகள், அவா்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இல்லாமல், ஏற்கெனவே பள்ளி அளவிலேயே அறிமுகமாகி பயிற்சி பெற்ற ஒன்றாக அமைய வாய்ப்பாக இருக்கும்.
பள்ளிகளில் ‘சொல்! வெல்!’ விநாடி-வினா மன்றமானது போட்டிக்கான பயிற்சி மையமாக மட்டுமன்றி, கேள்வி கேட்கும், சிந்திக்கும், ஆராயும், கற்றுக் கொள்ளும் மற்றும் பகிா்ந்து கொள்ளும் மாணவா் சமூகத்தை உருவாக்கும் கற்றல் தளமாக செயல்பட வேண்டும். இந்தச் செயல்பாடுகள் தங்களது பள்ளியில் முனைப்புடன் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்கள், ஆசிரியா்கள், மாணவா்களின் கருத்துகளை ஸ்ரீப்ன்க்ஷள்ஃற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்துக்கு அனுப்புமாறு தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.