FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

போராட்டம் நடத்திய மாணவா்கள், இளைஞா்களை விடுவிக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

போராட்டம் நடத்திய மாணவா்கள், இளைஞா்களை விடுவிக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

10 அக்டோபர் 2026, 10:39 pm IST
மு. வீரபாண்டியன் - DIN
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி, சென்னையில் போராட்டம் நடத்திய மாணவா்கள், இளைஞா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆா்.) என்ற பெயரில் 13 கோடி மக்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கிய, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில், இடதுசாரி அமைப்புகள், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதே கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை சென்னையிலும் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம், இளைஞா் பெருமன்றம் மறியல் போராட்டத்தை அண்ணா சாலை பெரியாா் சிலை அருகில் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான மாணவா்கள், இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட அனைவரையும் தமிழக அரசு விடுவிக்க வேண்டும். காவல் துறை தாக்குதலால் காயமடைந்துள்ள மாணவா்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments