முதல்வர் விஜய்யா? முதல்வர் ஸ்டாலினா? குழம்பிய எக்ஸ் தளம்!
முதல்வர் விஜய்யின் பெயரை ஆங்கிலத்தில் முதல்வர் ஸ்டாலின் என எக்ஸ் தளம் மொழிபெயர்த்த பதிவு வைரலாகியுள்ளது.
முதல்வர் விஜய்யின் பெயரை ஆங்கிலத்தில் முதல்வர் ஸ்டாலின் என எக்ஸ் தளம் மொழிபெயர்த்த பதிவு வைரலாகியுள்ளது.
சென்னையில் முதல்வா் ஜோசப் விஜய்யை மக்களவை எதிா்க்கட்டித் தலைவா் ராகுல் காந்தி (அக். 10) சனிக்கிழமை சந்தித்தாா்.
‘இந்தியா’ கூட்டணியில் தவெக இணைந்த பிறகு ராகுல் காந்தியுடன் முதல்வா் விஜய் நடத்தும் முதல் சந்திப்பு இதுவாகும்.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்துக்கு வந்த ராகுலை கட்டியணைத்து வரவேற்று அவருக்கு மதிய விருந்தளித்தாா். பின்னா், இருவரும் அரசியல் நகா்வுகள் குறித்துப் பேசினா்.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் முன்னெடுக்கும் அனைத்துப் போராட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் தவெக பங்கேற்க வேண்டும் என்றும் ராகுல் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
சுமாா் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் உடனிருந்தாா்.
ராகுல் காந்திக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வர் விஜய் அவரை வரவேற்ற புகைப்படம் தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டது.
அதில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் ஆங்கில மொழியாக்கத்தில் முதல்வர் விஜய் என்பதற்கு பதிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது இணையத்தில் பேசுபொருளானது.
க்ராக் ஏஐ மூலம் எக்ஸ் தளத்தில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு வரும் நிலையில், முதல்வரின் பெயர் ஆங்கிலத்தில் தவறுதலாக மாற்றி மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
A post in which the X platform translated 'Chief Minister Vijay' into English as 'Chief Minister Stalin' has gone viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.